×

ஆஸி. மாஜி விக்கெட் கீப்பர் மரணம்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் காலமானார். 74 வயதான அவர் 1970-84ம் ஆண்டு கால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதம் உள்பட 3633 ரன் எடுத்துள்ளார். மேலும் 355 விக்கெட் எடுக்க காரணமாக இருந்துள்ளார். இவை தவிர 92 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1225 ரன் எடுத்துள்ளதுடன், 124 விக்கெட்டுகள் எடுக்க காரணமாக இருந்துள்ளார். ஓய்வுக்கு பிறகு தேர்வாளராக மாறிய மார்ஷ், 2014-2016 வரை ஆஸ்திரேலியாவின் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தார். இதனிடையே மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அவரது மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது….

The post ஆஸி. மாஜி விக்கெட் கீப்பர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Sydney ,Rod Marsh ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது