×

கோயில்களில் கணினி வழி ரூ.120 கோடி வாடகை வசூல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் மூலம் ரூ.120 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு ெதரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 1.7.2021 முதல் நாளது தேதி வரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை-1வது மண்டல இணை ஆணையர் அலுவலம் ரூ.14.99 கோடியும், சென்னை -2 மண்டலம் ரூ.13.53 கோடியும், காஞ்சிபுரம் மண்டலம் ரூ. 7.42 கோடியும், திருச்சி மண்டலம் ரூ.6.96 கோடியும், திண்டுக்கல் மண்டலம் ரூ.5.58 கோடியும், நாகை மண்டலம் ரூ.5.23 கோடியும், மயிலாடுதுறை மண்டலம் ரூ.5.12 கோடியும், மதுரை மண்டலம் ரூ.4.9 கோடியும், நெல்லை மண்டலம் ரூ.4.3 கோடியும், வேலூர் மண்டலம் ரூ.4.37 கோடியும், சேலம் மண்டலம் ரூ.3.94 கோடியும், தூத்துக்குடி மண்டலம் ரூ.3.89 கோடியும், கடலூர் மண்டலம்  ரூ.3.84 கோடியும், கோவை மண்டலம் ரூ.3.68 கோடியும், ஈரோடு மண்டலம் ரூ.3.45 கோடியும், தஞ்சாவூர் மண்டலம் ரூ.2.32 கோடியும், திருவண்ணாமலை மண்டலம் ரூ.2.05 கோடியும், விழுப்புரம் மண்டலம் ரூ.1.19 கோடியும், சிவகங்கை மண்டலம் ரூ.1.9 கோடியும், திருப்பூர் மண்டலம் ரூ.1.5 கோடி என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோயில்களான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ரூ.4.28 கோடியும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.3.23 கோடியும், பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ரூ.2.05 கோடியும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ரூ.1.79 கோடியும், பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் ரூ.1.43 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில்ரூ.1.39 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ரூ.1.26 கோடியும், திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோயிலில் ரூ.1.24 கோடியும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ரூ.1.16 கோடியும்,  காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேசுவரர் சுவாமி கோயிலில் ரூ.1.15 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில்  திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோயில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கோயில்களில் கணினி வழி ரூ.120 கோடி வாடகை வசூல்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Sekarbabu ,Chennai ,Minister ,Sekarbapu ,
× RELATED சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக...