×

சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அறிவுறுத்தல்!!

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சட்டமன்ற அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுத்துறை அறிவிப்புகளின் தற்போதை நிலை குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய அறிவிப்புகள் கூறித்தும் கலந்தாலோசித்தார்கள்.

பின்னர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசும்போது தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணங்களுக்கேற்ப கூட்டுறவுத்துறை சிறப்பான செயல்பாடுகளை செய்துவருகிறது. அரசின் திட்டங்கள், பொங்கல் பரிசு தொகுப்பு, நிவாரண தொகை வழங்குதல் போன்ற சிறப்பு அறிவிப்புகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியினையும் செவ்வனே செய்து வருகிறது பாராட்டுக்குரியது.

கூடுதல் பதிவாளர்களாகிய நீங்கள் அனைவரும் துறை செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நமது துறை சார்பில் அறிவிக்கப்படவுள்ள அறிவிப்புகளை சிறப்பான முறையில் தயார் செய்திட வேண்டும். அறிவிப்புகள் மக்கள் நலன் சார்ந்ததாகவும், அரசுக்கும் மக்களும் பாலமாக விளங்கும் வகையில் அமைந்திட வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வுக்கூட்டம் மூலம் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்படவுள்ள அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் உள்ள சாத்திய கூறுகளை ஆராய்ந்து, துரிதமான முறையில் அறிவிப்புகளை நிறைவேற்றிட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிவிப்புகளின் நிலை குறித்து அரசுக்கு அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர்.கே.கோபால்.இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர்.ந.சுப்பையன்.இ.ஆப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜெ.விஜயராணி.இ.ஆ.ப., ஆகியோர் உட்பட அனைத்து கூடுதல் பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

The post சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Minister Periyakaruppan ,CHENNAI ,Minister ,Cooperatives ,KR Periyakaruppan ,Periyakaruppan ,Dinakaran ,
× RELATED மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை...