×

சென்னை 45வது புத்தகக்காட்சி: இளைஞர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ‘மாநில சுயாட்சி ஏன்’ என்ற புத்தகம்

சென்னை: சென்னை 45வது புத்தகக்காட்சியில் ‘ மாநில சுயாட்சி ஏன்’ என்ற புத்தகம் இளைஞர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. புத்தக காட்சி இன்னும் 5 நாட்களில் நிறைவடையும் என்பதால் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு 800 அரங்குகளில் ஒரு லட்சம் தலைப்புகளுக்கு மேல் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், புத்தக ஆர்வலர்கள் தேனடையை சுற்றும் தேனீக்களாய் புத்தக கடைகளை சுற்றி திரிகின்றனர். இந்த முறை இளைஞர் சமூகத்தையும் காந்தம் போல் கவர்ந்துருக்கிறது இந்த புத்தககாட்சி . அரசியல் விழிப்புணர்வு பெற்ற இந்த இளைய தலைமுறையிடம், தி.மு.கவை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ‘ஸ்.ஜே சாதிக் பாஷா’ எழுதிய மாநில சுயாட்சி ஏன் என்ற புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாநில சுயாட்சி முக்கியதுவம் குறித்து விவரித்துள்ள இந்த புத்தகம் 70, 80 காலங்களில் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நூலை ‘சீதை பதிப்பகம்’ விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. தற்போது தமிழ்நாடு ‘ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என உரக்க முழங்குகிறது.    இதனை தொடர்ந்து தன்னியல்பாய் இளைஞர் சமுகம் ஆர்வம் காட்டி வருகிறது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதன் விலையும் குறைவு என்றே கூறுகின்றனர். 2019ஆம் ஆண்டிற்கு மேல் இந்த புத்தகம் 2000 மேல் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும்,புத்தக காட்சியில் 600 மேற்பட்ட புத்தகம் விற்பனை ஆனதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ‘முரசொலி மாறன், ஆலடி அருணா’ என்ற பலர் மாநில சுயாட்சி பற்றி எழுதி இருக்கின்றனர். அந்த வரிசையில் ‘மாநில சுயாட்சி ஏன் ‘ என்ற புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது….

The post சென்னை 45வது புத்தகக்காட்சி: இளைஞர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ‘மாநில சுயாட்சி ஏன்’ என்ற புத்தகம் appeared first on Dinakaran.

Tags : Chennai 45th Book Fair ,Chennai ,45th Chennai Book Fair ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...