×

போதையில் போலீசாரை தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது

அம்பத்தூர்: கொரட்டூர் கெனால் ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 வாலிபர்கள் போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த கொரட்டூர் காவல் நிலைய ஏட்டு சீனிவாசன், ஊர்காவல் படை வீரர் ஆகாஷ்பாபு ஆகியோர், அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது, ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாரை சரமாரியாக தாக்கி விட்டு, தங்களது காரில் தப்பினர். காயமடைந்த ஏட்டு சீனீவாசன், ஊர்க்காவல் படை வீரர் ஆகாஷ்பாபு ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கொரட்டூர் டி.வி.எஸ் நகர், வள்ளலார் தெருவை சார்ந்த தீபக்ராஜ் (21), இவரது தம்பி ஜீவக்ராஜ் (19) ஆகியோர் போலீசாரை தாக்கி தப்பியது தெரியவந்தது. இவர்கள் தனியார் கல்லூரியில் 4ம் ஆண்டு பொறியியல் படிப்பும், பி.பி.ஏ 2ம் ஆண்டும் படித்து வருவதும் தெரிந்தது. அவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்….

The post போதையில் போலீசாரை தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Ambathur ,Korattur Kenal Road ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை