×

நடிகர் விநாயகனிடம் போலீசார் விசாரணை: செல்போன் பறிமுதல்

திருவனந்தபுரம்: சமீபத்தில் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து பிரபல மலையாள நடிகர் விநாயகன் தன்னுடைய பேஸ்புக்கில் அவதூறாக பேசியது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விநாயகன் மீது போலீசார் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு எர்ணாகுளம் போலீஸ் நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் விநாயகன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று போலீசார் கலூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது உம்மன்சாண்டிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் பேசவில்ைல என்றும் திடீர் என்று ஏற்பட்ட கோபத்தால் அப்படி பேசியதாகவும் தெரிவித்தார். போலீசார் அவரது செல்போனை ைகப்பற்றினர். இதற்கிடையே கொச்சியிலுள்ள விநாயகனின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக அவரும் எர்ணாகுளம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

மலையாள சினிமாவில் தடை?
நடிகர் விநாயகனுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருவதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மலையாள சினிமா சங்கத்தினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post நடிகர் விநாயகனிடம் போலீசார் விசாரணை: செல்போன் பறிமுதல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thiruvananthapuram ,Vinayakan ,Kerala ,Chief Minister ,Oommen Chandy ,Facebook ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...