×

அமெரிக்காவில் சலார் புது சாதனை

லாஸ்ஏஞ்சல்ஸ்: சமீபகாலமாக இந்திய படங்கள் உலக அளவிலான கவனத்தை ஈர்த்து வருகிறது. சீனா, ஜப்பான், ரஷியா, அமெரிக்கா போன்ற சர்வதேச மேலை நாடுகளிலும் அவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஜப்பானில் ரஜினிகாந்தின் படத்துக்கு கடந்த பல ஆண்டுகளாக கிடைத்த வரவேற்பு தற்போது விஜய், பிரபாஸ், ராம் சரண் ஆகியோரின் படத்துக்கும் கிடைத்து வருகிறது. கே.ஜி.எப்., படத்தின் வெற்றி இரண்டு பாகத்தையும் சேர்த்து ஜப்பானில் வெளியிட வைத்துள்ளது. இந்நிலையில், பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி உலகளவில் வெளியாகிறது.

இந்த படம் அமெரிக்காவில் 1979 திரையரங்கில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய படங்களிலே இத்தனை தியேட்டர்களில் வெளியாகும் முதல் படம் என்ற பெருமையை சலார் பெற்றுள்ளது. பாலிவுட் படங்கள் கூட அமெரிக்காவில் இத்தனை தியேட்டர்களில் ரிலீசானதில்லை. முன்னதாக வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1165 தியேட்டர்களிலும், ராதே ஷியாம் 776, அஃஞ்ஞாதவாசி 515, சர்க்காரு வாரிபாட்டா 486 தியேட்டர்களிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவில் சலார் புது சாதனை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : America ,Los Angeles ,China ,Japan ,Russia ,USA ,Rajinikanth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...