×

விவசாய நிலத்தில் மின்னழுத்த உயர்கோபுரங்கள் பணியை நிறுத்தி மக்கள் போராட்டம்: டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டலால் பரபரப்பு

திருவள்ளூர்: அரக்கோணம் மாவட்டம் மோசூரிலிருந்து திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் கிராமத்தின் வழியாக உயர் மின் அழுத்த உயர்கோபுரங்கள் மணவாளநகர் வரை செல்கிறது. இந்நிலையில், அதிகத்தூர் இந்திரா நகரில் தனியார் தொழிற்சாலைக்கு கூடுதலாக மின்சாரம் வினியோகம் செய்ய உயர் மின் அழுத்த உயர்கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உயர் மின் அழுத்த உயர்கோபுரங்கள் தங்களது நிலங்கள் வழியாக செல்வதால் பாதிப்பு ஏற்படும் என கடும் எதிர்ப்பு தெரிவித்து பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாய சங்க தலைவர் ஆறுமுகம் என்பவர் அங்கிருந்த 80 அடி டவர் மீது ஏறி உயர் மின் அழுத்த உயர்கோபுரங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டால் குதித்து தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில், கடம்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் டவர் மீது ஏறிய ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து உயர் மின்னழுத்த உயர்கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது….

The post விவசாய நிலத்தில் மின்னழுத்த உயர்கோபுரங்கள் பணியை நிறுத்தி மக்கள் போராட்டம்: டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Arakkonam District Mosur ,Thiruvallur ,Adhikathur ,Manavalanagar ,
× RELATED ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய...