×

திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15க்கும் மேற்பட்டோர் காயம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு வேனில் 20 மாணவர்கள் யோகா பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில்15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாத்திப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்த பின்னர் நெடுஞ்சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

The post திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Villupuram ,Villupuram district ,Paramakudi ,Ramanathapuram district ,Sriperumbudur ,Chengalpattu district ,Dindivanam ,
× RELATED பைக் மீது கார் மோதி வாலிபர் பலி