×

பங்காரு அடிகளாரின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னப்பிளவு குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்த  நாளை முன்னிட்டு, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மிஷன் ஸ்மைல் மருத்துவ தொண்டு நிறுவனம் இணைந்து உதடு மற்றும் அண்ணப்பிளவு சரி செய்யும் அறுவை சிகிச்சைகளை மார்ச் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் இலவசமாக  நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த கருத்தரங்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.அப்போது, தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி, அதில் அன்னப்பிளவு குறைபாடு உள்ளவர்களை தேர்வு செய்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள், உணவு அனைத்தும்  இலவசமாக வழங்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு, தங்களது குடும்பத்தில் உள்ள அன்னப்பிளவு குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவர்கள்  நலமுடன் வாழ வழி செய்ய வேண்டும் என விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாகிகள் டாக்டர் ரமேஷ், கார்த்திகா,  கண்ணன், மிஷன் ஸ்மைல் மருத்துவ தொண்டு நிறுவன டாக்டர் பிரசாத் மற்றும் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post பங்காரு அடிகளாரின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னப்பிளவு குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Maduranthagam ,Atiparasakthi ,
× RELATED மதுராந்தகம் இந்து மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு