×

ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக உக்ரைனுக்கு போர் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வழங்கியது பிரான்ஸ் அரசு

பாரீஸ் : ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக உக்ரைனுக்கு போர் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை பிரான்ஸ் அரசு அனுப்பி உள்ளது. நேட்டோ உறுப்பு நாடான பிரான்சிடம் உதவிக் கோரி அதிபர் இமானுவேல் மேக்ரானிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து ரஷியாவின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள 300 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அதிபர் மேக்ரான் அறிவித்தார். இதையடுத்து உடனடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் பிரான்சில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் பேசியதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது கூட்டாளிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வந்து கொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் எந்த வகையான ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. …

The post ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக உக்ரைனுக்கு போர் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வழங்கியது பிரான்ஸ் அரசு appeared first on Dinakaran.

Tags : French government ,Ukraine ,Russia ,Paris ,Dinakaran ,
× RELATED ரஷ்யா- உக்ரைன் டிரோன் யுத்தம்: 90 டிரோன்கள் அழிப்பு