×

விஜய் சேதுபதி, கேத்ரினா கைப் நடித்துள்ள, மெரி கிறிஸ்துமஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மும்பை: இந்தியில் காமெடியனாக மும்பைகர் படத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஃபர்ஸி வெப்சீரிஸிலும் மற்றும் வில்லனாக ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவர் பாலிவுட்டில் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் தான் ‘மெரி கிறிஸ்மஸ்’. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி உள்ளார். இவர் அந்தாதுன் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கேத்ரினா கைப் நடித்துள்ளார். மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் இந்தி மற்றும் தமிழ் வெர்ஷனில் விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைப் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். ஆனால் அவர்களுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகள் மட்டும் அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு உள்ளனர். இந்தியில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், டினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள வேடங்களில் தமிழில் சண்முகராஜா, கெவின் ஜெய் பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இரு மொழிகளிலும் கவுரவ வேடத்தில் ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார்.

The post விஜய் சேதுபதி, கேத்ரினா கைப் நடித்துள்ள, மெரி கிறிஸ்துமஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Katrina Kaif ,Mumbai ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்