×

நேபாள நாட்டில் இருந்தபடி இந்திய வாலிபர்களுக்கு கடன் கொடுத்து மோசடி: 2 சீனர்கள், 115 நேபாளிகள் கைது

காத்மாண்டு: இந்தியர்களை குறிவைத்து ஆன்லைனில் கடன் மோசடி செய்த 2 சீனர்கள், 115 நேபாளிகளை போலீசார் கைது செய்தனர். நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஓல்டு பனேஸ்வோர் பகுதியில் சட்ட விரோதமாக ஆன்லைனில் கடன் வழங்கும் கும்பல் செயல்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காத்மாண்டு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், சீனாவை சேர்ந்த சாங் ஹூ போ உள்பட 37 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல, பக்தபூர் மாவட்டத்தில் சனோ திமி பகுதியில் நடத்திய மற்றொரு சோதனையில் சீனாவை சேர்ந்த வாங் ஜினோ உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய சோதனையில், இந்திய இளைஞர்களை குறிவைத்து ரூ.3,000 முதல் ரூ.30,000 வரை, 2.5 முதல் 3.5 சதவீத வட்டிக்கு கடன் அளித்து வந்தது தெரியவந்தது. கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தாத பட்சத்தில், அவர்களை தங்களிடம் வேலை பார்க்கும் நேபாள இளைஞர்கள், இளம் பெண்களை கொண்டு தொலைபேசியில் மிரட்டி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்….

The post நேபாள நாட்டில் இருந்தபடி இந்திய வாலிபர்களுக்கு கடன் கொடுத்து மோசடி: 2 சீனர்கள், 115 நேபாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Indians ,Dinakaran ,
× RELATED சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச...