×

இன்னுயிர் காப்போம் திட்டம்-நம்மை காக்கும் 48 மூலம் தமிழகம் முழுவதும் 21,762 பேர் பயன்

சென்னை: சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கவும் விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்கு கட்டணமில்லாத சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 609 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக எல்லைகளில் விபத்தில் சிக்கும் அனைவருக்கும் 48 மணி நேர இலவச சிகிச்சை பெற தகுதி உடையவர்கள்.கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அரசு மருத்துவமனையில் 18,730 பேருக்கு ரூ.14 கோடியே 65 லட்சத்து 43 ஆயிரத்து 038 வரையும், தனியார் மருத்துவமனையில் 3,032 பேருக்கு ரூ.5 கோடியே 12 ஆயிரத்து 40 ஆயிரத்து 312 வரை என மொத்தம் 21,762 பேருக்கு ரூ.19 கோடியே 77 லட்சத்து 83 ஆயிரத்து 350 வரை செலவிடப்பட்டுள்ளது. மேலும் 86.07 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும், 13.93 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post இன்னுயிர் காப்போம் திட்டம்-நம்மை காக்கும் 48 மூலம் தமிழகம் முழுவதும் 21,762 பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...