×

காட்டுத் தீயாக பரவும் கொரோனா : உலகளவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 42.97 கோடியாக அதிகரிப்பு!!

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42.97 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 97 லட்சத்து 81 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 35 கோடியே 84 லட்சத்து 12 ஆயிரத்து 963 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 59 லட்சத்து 35 ஆயிரத்து 581 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 79,564 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அமெரிக்காவில் 8,03,66,697 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 71,377 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 9,66,393 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 2,420 பேர் உயிரிழந்துள்ளனர்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்ததாக, தொற்று அதிகம் பாதித்ததில் பிரேசில் நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது. 2,84,85,502 பேர் இதுவரை அங்கு தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 1,33,626 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 66,46,490 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. …

The post காட்டுத் தீயாக பரவும் கொரோனா : உலகளவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 42.97 கோடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Geneva ,Wuhan, China ,
× RELATED தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக...