×

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : கச்சத்தீவு அருகே 22 தமிழக மீனவர்களை கைது செய்தது!!

கச்சத்தீவு : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரித்து வருகிறது. நேற்று இரவு 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை இன்று காலை 13 பேரை கைது செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர், இரண்டு விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்கள் விசைப்படைகளில் வந்து தமிழக மீனவர்களைச் சுற்றிவளைத்தனர்.இதையடுத்து தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு விரைந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்திருப்பதாகக் கூறி, தமிழக மீனவர்கள் 22 பேரையும், இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றி, கைதுசெய்து காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படட தமிழக மீனவர்கள் 22 பேர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. முன்னதாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் மற்றும் உடமைகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை கைப்பற்றி அவர்களைக் கைது செய்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது….

The post இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : கச்சத்தீவு அருகே 22 தமிழக மீனவர்களை கைது செய்தது!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Tamil Nadu ,Kachathivu ,Kachchathivu ,Nagai district ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்