×

தமிழக அரசின் ‘ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது’…! மார்ச் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

சென்னை: உயர்க்கல்வித் துறை அரசாணை எண்.163, உயர்க்கல்வித் (பி2) துறை 19.07.2018-ன்படி அறிவியல் நகரம் 2018-19 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் ‘ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது’-னை, வழங்கி வருகிறது. இவ்விருது கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரக அறிவியல் கண்டுப்பிடிப்பாளர்களுக்கு தலா ரூ.1,00,000 க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஊரக அறிவியல் கண்டுப்பிடிப்பாளர்கள் விண்ணப்பங்களை அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in-???????? பதிவிறக்கம் செய்து, அவற்றினை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் முன்மொழியப்பட்டு அறிவியல் நகரத்திற்கு 07.03.2022 மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது….

The post தமிழக அரசின் ‘ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது’…! மார்ச் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Education Department ,Higher Education ,Department ,Science City ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...