×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திருவள்ளூர் மாவட்டத்தை மொத்தமாக கைப்பற்றியது திமுக: 8 பேரூராட்சி, 7 நகராட்சிகளில் வெற்றி; மாவட்டத்தில் சுயேச்சை ஆதிக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி மற்றும் ஆவடி, திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி என ஒட்டுமொத்த நகராட்சிகளையும், திருமழிசை என அனைத்து பேரூராட்சிகளிலும் ஒட்டு மொத்தமாக திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் திருவள்ளூரில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.* திருவள்ளூர் நகராட்சிதிருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில், திமுக – 7, அதிமுக – 1, காங். – 1, சுயே. – 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 7 இடங்களுக்கும் மேல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளது.* பூந்தமல்லி நகராட்சிபூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில், சுயேச்சை 5, திமுக – 3 வெற்றி பெற்றுள்ளது. மற்ற 13 வார்டுகளில் 8 வார்டுகளுக்கும் மேல் திமுக முன்னிலை வகிக்கிறது. * திருவேற்காடு நகராட்சி திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 5 இடங்களிலும் ,  சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 6 இடங்களுக்கும் மேல் திமுக முன்னிலையில் உள்ளது. * பொன்னேரி நகராட்சி வெற்றிபொன்னேரி 27ல், 9 இடங்களை திமுக வென்றுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. மெஜாரிட்டி அடிப்படையில் பொன்னேரியில் திமுக வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மேலும், அதிமுக 4, சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். * திருத்தணி திமுக வெற்றிதிருத்தணி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 18வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 20 வார்டுகளில் தேர்தல் நடந்தது. இதில், 17 வார்டுகள் என மொத்தம் 18 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 வார்டிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.* திருநின்றவூர் நகராட்சி  வெற்றிதிருநின்றவூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 8 வார்டுகளிலும்,  கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 வார்டிலும் என 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 1 வார்டிலும், பிஎஸ்பி 2 வார்டுகளிலும், சுயேச்சை 1  வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. * பேரூராட்சிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, கும்மிடிபூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, திருமழிசை,  ஊத்துக்கோட்டை பேரூராட்சிகள் உள்ளன.* திருமழிசை பேரூராட்சிதிருமழிசை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் திமுகவே 9க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலை பெற்று, பேரூராட்சியை கைப்பற்றுகிறது. மேலும் அதிமுக 2 இடத்திலும் மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி அடிப்படையில் திமுக திருமழிசை பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்ததில் திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவுக்கு அடுத்தபடியாக சுயேச்சைகள் தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். இந்த இடங்களில் அதிமுக மூன்றாவது அல்லது 4வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது.* ஊத்துக்கோட்டை பேரூராட்சிஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில், 12வது வார்டில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மீதமுள்ள 14 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக 13 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சியை பிடித்தது. அதிமுக 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சியை இழந்தது. இதில் 10வது வார்டில் மட்டும் இரண்டு வேட்பாளர்கள் சம அளவில் ஓட்டு பெற்றதால், குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் திமுகவை சேர்ந்த ஆப்தாப்பேகம் வெற்றி பெற்றார்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திருவள்ளூர் மாவட்டத்தை மொத்தமாக கைப்பற்றியது திமுக: 8 பேரூராட்சி, 7 நகராட்சிகளில் வெற்றி; மாவட்டத்தில் சுயேச்சை ஆதிக்கம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tiruvallur district ,Tiruvallur ,Thiruvallur district ,Avadi ,Thiruvekadu ,Poontamalli ,Tirumazhisai ,Urban Local Government Election ,
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்