×

அலியா பட் படத்துக்கு 4 காட்சிகளில் ‘கட்’

மும்பை: அலியா பட் நடித்துள்ள கங்குபாய் கத்தியவாடி படத்துக்கு 4 இடங்களில் சென்சார் போர்டு கத்திரி போட்டிருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பட், அஜய் தேவ்கன் நடித்துள்ள இந்தி படம் கங்குபாய் கத்தியவாடி. இந்த படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 17ம் தேதி இந்த படம் சென்சாருக்கு சென்றது. அப்போது சில காட்சிகளை சுட்டிக் காட்டி அந்த காட்சிகளை முழுமையாக நீக்கும்படி சென்சார் அதிகாரிகள், படக்குழுவுக்கு தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க படக்குழு மறுத்தது. மீண்டும் நேற்று முன்தினம் சென்சாரில் இந்த படம் சில மாற்றங்களுடன் திரையிடப்பட்டது. அலியா பட் பேசும் ஒரு வசனம், நேருவை பற்றிய வசனம் மற்றும் மேலும் 2 காட்சிகளை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் கூறினர். வேறு வழியின்றி இதற்கு சஞ்சய் லீலா பன்சாலியும் அவரது படக்குழுவும் ஒப்புக்கொண்டது. அதையடுத்து 4 காட்சிகளில் சில இடங்கள் வெட்டப்பட்டன. ஓரிடத்தில் பீப் ஒலி சேர்க்கப்பட்டது. அத்துடன் யுஏ சான்றிதழை சென்சார் போர்டு கொடுத்திருக்கிறது….

The post அலியா பட் படத்துக்கு 4 காட்சிகளில் ‘கட்’ appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Gangubai Kathiawadi ,Aliya Butt ,Sanjay Leela ,Butt ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...