×

நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கேள்வி: உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: நில அபகரிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதால் வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை நிராகரித்த நீதிபதிகள், ‘‘இரு தனி நபருக்கு இடையேயான நில வழக்கு உச்ச நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு ஒன்றில் முறையீட்டை ஏற்று நில அபகரிப்புக்கு என ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த 782 வழக்குகளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பதிவாளர் தரப்பில் மாற்றியது ஏன்? அதேப்போன்று இரு தனி நபர்களுக்கிடையே இருக்கும் நிலப் பிரச்னையில் அரசு எதன் அடிப்படையில் தலையிடுகிறது என்பது புரியவில்லை. இதில் கடந்த 2011ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மூலம் நில அபகரிப்பு தனிப்பிரிவு மற்றும் நில அபகரிப்புக்கென தனி சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே இருக்கக்கூடிய நீதிமன்றங்களின் கட்டமைப்பை தரம் உயர்த்தினாலே போதுமானது எனக்கூறி, நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏன் ரத்து செய்தது,’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது….

The post நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கேள்வி: உச்ச நீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.

Tags : High Court of Chennai ,Supreme Court ,New Delhi ,Judge ,M. R.R. The ,Shaw ,Dinakaran ,
× RELATED செல்லப் பிராணிகள் பராமரிப்பு...