×

மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.3.14 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் வேகம் குறைந்து, தற்போது நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு கீழ் தொற்று குறைந்துள்ளது. ஆனாலும், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதைதொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார், சிறப்பு குழு அமைத்து, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 772 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.3.14 லட்சம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக 225 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது….

The post மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.3.14 லட்சம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...