×

திமுக தலைவரின் 69வது பிறந்தநாளையொட்டி மருத்துவம், ரத்ததானம், கண் சிகிச்சை முகாம்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சி வடக்கு மாவட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டலலின் 69வது பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கண்சிகிச்சை முகாம் நடத்த வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கண்சிகிச்சை முகாம் தொடர் பொதுக்கூட்டங்கள் விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கூறினார்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர்கள் விசுவநாதன், அன்புச்செழியன், மாவட்ட பொருளாளர்கள் சேகர், இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்மணி, மூர்த்தி, இதயவர்மன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தீர்மானங்கள் குறித்து, மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசினார். அதில் அவர் பேசியதாவது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் வரும் மார்ச் மாதம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்களை நடத்தி, அதில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும். 1ம் தேதி அனைத்து கிளைகளிலும் திமுக கொடி, தோரணங்கள் கட்டி, ஒலிபெருக்கி அமைத்து இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு – உடைகளை வழங்க வேண்டும். மேலும், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம் உள்பட பல்வேறு மருத்துவ உதவிகளை செய்து, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட், கைபந்து, கால்பந்து, இறகுபந்து, கபடி உள்பட பல விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க வேண்டும்.முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை பதிவு செய்து உருவாக்கிய உங்களின் ஒருவன் என்ற வாழ்க்கை பயண புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி மாலை 5 மணியளவில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள ஆலந்தூர் பகுதி, நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் நடைபெற உள்ளது.அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட உள்ளார். அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் மாபெரும் புத்தக வெளியீட்டு விழாவில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் – செயல்வீரர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கில் அணி திரண்டு பங்கேற்க வேண்டும் என்றார்….

The post திமுக தலைவரின் 69வது பிறந்தநாளையொட்டி மருத்துவம், ரத்ததானம், கண் சிகிச்சை முகாம்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister of Medicine ,Ratadanam ,Treatment Camps ,President of the Kazhagam ,President ,Moe Andarasan ,Kanchipuram ,Kanchi ,Kanji ,G.K. Stalin ,Medical ,Bleeding Camp ,Ophthalmic Camp ,Minister ,President of the ,Djagam ,
× RELATED ஆவடி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்...