×

இருங்குன்றப்பள்ளி – மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணியால் தொடரும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளி – மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றப்பள்ளி – மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணி, கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பஸ், கார், லாரி ஆகிய வாகனங்களை, போலீசார் மாற்று பாதையில் அனுப்பி வைக்கின்றனர். ஆனாலும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதிகளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் வர தொடங்கியதால், மாமண்டூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்வதால், தினமும் சுமார் 3 கீமீ தூரம், நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதையொட்டி வேலை, மருத்துவ சிகிச்சை உள்பட பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலின் காரணமாக பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதனால் உயிர்பலி ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சீரமைக்கப்படும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்….

The post இருங்குன்றப்பள்ளி – மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணியால் தொடரும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Darkundupealschool ,Mamantur ,Chengalpattu ,Arunkuthappalli ,Dangarapalle ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பால பாதையை...