×

வைரலாகும் குஷி படத்தின் இரண்டாவது பாடல் ‘ஆராத்யா’

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘குஷி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இப்படத்தின் முதல் பாடலான ‘என் ரோஜா நீயே’ பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து ‘குஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாடலான ‘ஆராத்யா’ பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

The post வைரலாகும் குஷி படத்தின் இரண்டாவது பாடல் ‘ஆராத்யா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : kushi ,Shiva Nirvana ,Vijay Devarandha ,Samantha ,maitri ,maitri Movie Makers ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை