×

சிவகங்கையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் படுதோல்வி: 1 ஓட்டு கூட கிடைக்காத சோகம்

சிவகங்கை: சிவகங்கையில் 1-வது வார்டு பகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் 1 ஓட்டு கூட வாங்காமல் படுதோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் 12,820 வார்டுகளுக்கான வாக்குகளையும் எண்ணும் பணி துவங்கி, நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியினர் ஓட்டுகளைப் பிரிக்காமல் பின்னடைவில் உள்ளனர்.இன்று பிற்பகலில் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகிவிடும் நிலையில், நிறைய இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. சில இடங்களில் திமுக, அதிமுக கட்சியினரையும் தவிர்த்து விட்டு, சுயேட்சைகளில் கை ஓங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 12,820 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 30,735 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 60.70 % வாக்குகளும், சென்னையில் 43.59 %வாக்குகளும் பதிவாகி இருந்தன.வாக்குப்பதிவு முடிந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும், அருகே இருந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக லாரிகளில் வாக்கு பதிவு இயந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டன. அங்கு வார்டு வாரியாக பெட்டிகள் வரிசைப்படுத்தி பிரித்து அடுக்கப்பட்டன. பின்னர் அறைக் கதவுகள் ‘சீல்’ வைத்து பூட்டப்பட்டன.தமிழகத்தில் 268 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களிலும் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் 150 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பாக நடந்து வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரம் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிவகங்கை நகராட்சி 1வது வார்டு பகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு 1 ஓட்டு கூட கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார்டில் செங்கோல் என்பவர் மக்கள் நீதி மய்யம் சார்ப்பில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்துள்ளார்….

The post சிவகங்கையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் படுதோல்வி: 1 ஓட்டு கூட கிடைக்காத சோகம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Makkal Neethi Maiyam ,Makkal Neeti Maiyam ,Sengkol ,Dinakaran ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...