×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வம் காட்டாத பிரேமலதா; மாநகராட்சியில் இதுவரை ஒரு வெற்றியை கூட காணாத தேமுதிக

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றது. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகியது. வாக்கு எண்ணும் மையங்களில் 40,910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60,000 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டடு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11,797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன. மாநகராட்சியில் தற்போது வரை எந்த ஒரு வெற்றியையும் பதிவு செய்யாத தேமுதிக நகராட்சியில் 5 இடங்களிலும், பேரூராட்சியில் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரேமலதா ஆர்வம் காட்டவில்லை எனவும், கடைசி கட்டத்தில் தான் தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியது. …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வம் காட்டாத பிரேமலதா; மாநகராட்சியில் இதுவரை ஒரு வெற்றியை கூட காணாத தேமுதிக appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Demuthika ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை