×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று எந்தவித அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக முடிந்தது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், 268 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர், மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். 38 மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். வார்டு வாரியாக முடிவுகளை அறிவித்தல், கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : State Election Commissioner ,Palanikumar ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...