×

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் மாசிமக பெருவிழா நிறைவு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமகப்பெருவிழா 12 சைவ கோயில்கள் மற்றும் 5 வைணவ கோயில்கள் இணைந்து 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இவ்விழா ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் மற்றும் கௌதமேஸ்வரர் என 6 சைவ கோயில்களில் கடந்த 8ம் தேதியும், சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி மற்றும் ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 வைணவ கோயில்களில் கடந்த 9ம் தேதியும் மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலாவும் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வைணவ தலங்களில் 9ம் நாளான கடந்த 17ம் தேதி மாசிமகத்தினை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முன்தினம் இரவு சக்கரபாணி சுவாமி திருக்கோயில் மாசிமகப் பெருந்திருவிழாவின் நிறைவாக விடையாற்றி விழா நடைபெற்றது. இதில் புஷ்ப பல்லக்கில்  விஜயவல்லி தாயாருடன், சக்கரராஜா சர்வ அலங்கார வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். …

The post கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் மாசிமக பெருவிழா நிறைவு appeared first on Dinakaran.

Tags : Massimag Festival ,Chakrapani Swamy Temple ,Kumbakonam ,Masimaha festival ,Tanjore ,Kumbakonam Chakrapani Swamy temple ,
× RELATED கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் 10, 11ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து