×

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் இடஒதுக்கீட்டின் கீழ் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 24ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்: 28ம் தேதி பொதுப்பிரிவுக்கு ஆன்லைன் கலந்தாய்வு

சென்னை:  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கிறது. அதில், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. பி.வி.எஸ்சி – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.பி.வி.எஸ்சி – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2021-22ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அக்டோபர் 8ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. .வி.எஸ்சி-ஏ.ஹெச் படிப்புக்கு 22,488 பேர் (கலையியல் பிரிவுக்கு 22,240, தொழிற்கல்விக்கு 248), பி.டெக் படிப்புகளுக்கு 4,410 பேர் என மொத்தம் 26,898 பேர் விண்ணப்பித்திருந்தனர். பரிசீலனைக்குப்பின் பி.வி.எஸ்சி-ஏ.ஹெச் படிப்புக்கு 21,144 (கலையியல் பிரிவுக்கு 21,899, தொழிற்கல்விக்கு 245), பி.டெக் படிப்புகளுக்கு 4,315 என மொத்தம் 26,459 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 2ம் தேதி பி.வி.எஸ்சி-ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கும் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24ம் தேதி தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு 24ம் தேதி காலை 9 மணி மற்றும் 25ம் தேதி பகல் 11.30 மணிக்கு நடக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்படி பி.வி.எஸ்சி – ஏ.ஹெச் படிப்பில் 31 இடங்கள், பி.டெக் படிப்பில் 8 இடங்கள் என மொத்தம் 39 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 25ம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கான (விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு நேரடியாக சென்னை பெரியமேட்டில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது. மேலும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுப்பிரிவு கலந்தாய்வு  www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்கள் மூலம் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு வரும் 28ம் தேதி காலை 10 மணி முதல் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். இடங்கள் ஒதுக்கீடு விவரம் மார்ச் 5ம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படும். இட ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் மார்ச் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிக்கு நேரடியாக சென்று அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். …

The post அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் இடஒதுக்கீட்டின் கீழ் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 24ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்: 28ம் தேதி பொதுப்பிரிவுக்கு ஆன்லைன் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Namakkal ,Nellai ,Orathanadu ,Salem ,Thalivasal ,Udumalaipet ,Theni ,Tamil Nadu Veterinary Science University ,
× RELATED நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!