×

மீனவர் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய  அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண இரு தரப்பு மீனவர்களிடையிலான பேச்சுக்களை விரைவில் தொடங்குவதென அண்மையில் நடந்த இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இரு  தரப்பு பேச்சுக்களை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post மீனவர் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Chennai ,Bamaka ,Anmani ,Nagapattinam ,Kodiyakar ,Bengal Sea ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயில்.....