×

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு சட்டமன்ற தேர்தலை காட்டிலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலை காட்டிலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறினார். தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி வாக்குப்பதிவு செய்தனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தலை காட்டிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் 10 நாட்களாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன், நல்ல வரவேற்பு இருந்தது. கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் சரி, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு தமிழக மக்கள் உரிய அங்கீகாரம் அளிப்பார்கள் என நம்புகிறோம்.  மேற்கு மண்டலத்தில் இந்த ஆட்சியின் செயல்பாட்டிற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த முறை மேற்கு மண்டலத்தில் கண்டிப்பாக திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். கோவையில் திமுக குறித்து குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் யாரும் கூறவில்லை. தோல்வி பயத்தில் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டுகிறார்.எனக்கு அமைச்சர் பதவி வழங்கலாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் பதவி கொடுத்தால் அப்போது அதுபற்றி பேசிக் கொள்ளலாம். முடிவெடுக்க வேண்டியது தலைமைதான்’ என்றார்.மக்களுக்கு உதவ நீளும் முதல்கரம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவ நீளும் முதல்கரமான உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என் வாக்கினை பதிவு செய்தேன். உரிமையை கேட்டுப்பெற கடமையாற்றுமாறு வாக்காளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்….

The post உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு சட்டமன்ற தேர்தலை காட்டிலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Udayanidhi Stalin ,MLA ,Chennai ,Chepakkam- ,Tiruvallikkeni ,Udhayanidhi ,
× RELATED நாடாளுமன்றத்துக்கு செல்லும் 17 புதுமுகங்கள்