×

அமெரிக்க மூத்த விஞ்ஞானி பலி

சென்னை: பாத்ரூமில் வழுக்கி விழுந்த அமெரிக்க மூத்த விஞ்ஞானி, மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார். சென்னை அடையார், பக்தவச்சலம் நகர், 4வது தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் (75).  இவரது மகன் கார்த்திக் (45). இவர் அமெரிக்காவில் செயல்படும் மருந்து நிறுவனத்தில் மூத்த  விஞ்ஞானியாக  பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது தந்தை, தாய்யை பார்க்க, கடந்த 13ம் தேதி அமெரிக்காவிலிருந்து அடையாற்றில் உள்ள அவரது இல்லத்துக்கு  வந்துள்ளார். இதனை தொடர்ந்து,  நேற்று காலை கார்த்திக் பாத்ரூமுக்கு  சென்றுள்ளார். பின் வெளியே வரும்போது கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் பின் மண்டையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த   மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்து அடையார் போலீசார் விசாரித்து வருகின்றனர். …

The post அமெரிக்க மூத்த விஞ்ஞானி பலி appeared first on Dinakaran.

Tags : Bali ,CHENNAI ,Chennai Adyar, ,Bhaktavachalam ,
× RELATED குலதெய்வ கோயிலுக்கு சென்ற மதுரையை சேர்ந்தவர் பலி