×

தேர்தல், கொரோனா விதிமீறியதாக 95 வழக்குகள் பதிவு வேட்பாளர்களுக்கு 1.68 லட்சம் அபராதம்: 2,086 சுவரொட்டிகள் அகற்றம்

சென்னை: சென்னையில் தேர்தல் நடத்தை மற்றும்  கொரோனா பாதுகாப்பு விதிமீறல்  தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,086  சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, வேட்பாளர்களிடம் ₹1.68 லட்சம் அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண  தேர்தலை முன்னிட்டு, கடந்த ஜனவரி  26ம் தேதி மாலை 6.30 மணி முதல் தேர்தல்  மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ள  நிலையில் அரசு மற்றும்  பொதுக்கட்டிடங்கள், தனியார் இடங்களில்  வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின்  விளம்பரங்கள் மாநகராட்சி  பணியாளர்களால் அழிக்கப்பட்டன. சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில்  சுவரொட்டிகள், வில்லைகள் மற்றும் சுவர்  விளம்பரங்கள் வரையும்  நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை  உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும் அவற்றை அகற்றுவதற்கான செலவினங்களை  சம்பந்தப்பட்ட  அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கவும்   உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த 16ம் தேதி ஒருநாள் மாநகராட்சி   அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 2,086 சுவரொட்டிகள்   அகற்றப்பட்டு, அந்த சுவரொட்டிகளை ஒட்டிய நபர்களிடமிருந்து ₹1 லட்சத்து 68   ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை   மீறி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை பொது   இடங்களில் 1,831 சுவர் விளம்பரங்கள், 10,379 சுவரொட்டிகள், 104 பேனர்கள்,   883 இதர விளம்பரங்கள் என மொத்தம் 13,197 விளம்பரங்கள் மாநகராட்சி   பணியாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக  காவல் நிலையத்தில்  45 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  தனியார்  இடங்களில் 1,677  சுவர் விளம்பரங்கள், 19,106 சுவரொட்டிகள், 525 பேனர்கள்,  808 இதர  விளம்பரங்கள் என மொத்தம் 22,116 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.  மேலும்,  இதுதொடர்பாக காவல் நிலையத்தில் 20 புகார்கள்  பதிவு  செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் மற்றும்   கொரோனா பாதுகாப்பு  தொடர்பான விதிமீறல் என மொத்தம் 95 வழக்குகள்  பதியப்பட்டுள்ளன, என மாவட்ட தேர்தல்  அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்….

The post தேர்தல், கொரோனா விதிமீறியதாக 95 வழக்குகள் பதிவு வேட்பாளர்களுக்கு 1.68 லட்சம் அபராதம்: 2,086 சுவரொட்டிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaraan ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...