×

முல்லை பெரியாற்றில் புதிய அணை அறிவிப்புக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள சட்டமன்றத்தில் அம்மாநில கவர்னர் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது  உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் செயலாகும். கேரள அரசின் இந்த செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கேரள அரசின் இதுபோன்ற அத்துமீறிய செயலுக்கு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றுதமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post முல்லை பெரியாற்றில் புதிய அணை அறிவிப்புக்கு ஓபிஎஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : OPS ,Mullu Periyadh ,Chennai ,Indirect Coordinator ,O. Bannerselvam ,Kerala Government ,Mullap Periyadr ,Mullu Periyadu ,Dinakaran ,
× RELATED சொத்து குவிப்பு வழக்குகளிலிருந்து...