×

ராம் பொதினேனி ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’

ஐதராபாத்: போயபதி ஸ்ரீ னு இயக்கத்தில் ராம் பொதினேனி நடிக்கும் படத்துக்கு ‘ஸ்கந்தா – தி அட்டாக்கர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதை ஸ்ரீ னிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீ னிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.
‘ஸ்கந்தா’ என்பது முருக கடவுளின் மற்றொரு பெயர் என்றும், ‘தி அட்டாக்கர்’ என்ற டேக்லைன் ஹீரோவின் மூர்க்கமான குணத்தைக் குறிக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

டைட்டில் லோகோவில், முருகனின் ஆயுதமான வேல் மற்றும் விபூதிப்பட்டை இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் சிவா சண்டைப் பயிற்சி அளிக்கிறார். சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.
ராம் பொதினேனிக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், வரும் செப்டம்பர் 15ம் தேதி ‘ஸ்கந்தா’ படம் திரைக்கு வருகிறது.

The post ராம் பொதினேனி ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sri Leela ,Ram Pothineni ,Hyderabad ,Boyapati Sri Nu ,Sri Nivasa Chithuri ,Sri Nivasa ,Muruga ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...