×

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இரட்டை வேடத்தில் சிம்பு

சென்னை: சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷூடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘எஸ்டிஆர் 48’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இது, வரலாற்று படமாக உருவாகிறது. முதல்முறையாக சிம்பு வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்காக தாய்லாந்து சென்ற சிம்பு இரண்டு மாதங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றார். அதன்பிறகு சமீபத்தில் லண்டன் சென்ற அவர் சில தற்காப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும்‌ ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிம்பு, ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார். ‘மன்மதன்’ படத்திற்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இரட்டை வேடத்தில் சிம்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Desingu Periyasamy ,Chennai ,Simbu ,Kamalhaasan ,Raj Kamal Films Institute ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கொரோனா குமார் படம் விவகாரம் பட...