×

மருத்துவமனையில் புழல் சிறை கைதி மரணம்

புழல்: சென்னை திருவேற்காடு, ராஜி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (41). இவர், திருவேற்காடு போலீசாரால் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி லட்சுமணனுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்….

The post மருத்துவமனையில் புழல் சிறை கைதி மரணம் appeared first on Dinakaran.

Tags : worm prison ,Lakshmanan ,Raji Nagar, Chennai Thiruvedu ,Tiruvedu police ,Hospital of Worm Prison ,Dinakaran ,
× RELATED 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம்...