×

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : நிக்கோல்ஸ் சதம்; நியூசி. ரன் குவிப்பு

கிறிஸ்ட்சர்ச்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 49.2 ஓவரில் 95 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 7 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன் எடுத்திருந்தது.நிக்கோல்ஸ் 37, நைட் வாட்ச்மேன் வாக்னர் 2 ரன்னில் களத்தில் இருந்தனர். 2வது நாளான இன்று வாக்னர் 49, மிட்செல் 16, கிராண்ட்ஹோம் 45, ஜேமீசன் 15, சவுத்தி 4 ரன்னில் ஆட்டம்இழக்க சதம் விளாசிய நிக்கோல்ஸ் 105 ரன்னில் அவுட் ஆனார். 112 ஓவரில் நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன் எடுத்திருந்தது. டாம் ப்ளண்டேல் 89, ஹென்றி 43 ரன்னில் களத்தில் இருந்தனர். தென் ஆப்ரிக்காவை விட நியூசி. 365 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது….

The post தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : நிக்கோல்ஸ் சதம்; நியூசி. ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : South Africa ,Nichols Chadam ,Newsy ,Christchurch ,New Zealand ,Nichols Cham ,Dinakaran ,
× RELATED இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள்