×

வாய் பேசாத, காது கேளாமல் பிறக்கும் குழந்தைகள் காஷ்மீரில் விநோத கிராமம்: ராணுவம் தத்தெடுத்தது

பதேர்வா: காஷ்மீரில் ஒவ்வொரு குடும்பத்திலும் காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் பிறக்கும் விநோத கிராமத்தை ராணுவம் தத்தெடுத்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.காஷ்மீரின் தோடா மாவட்டம், தாதாகி மலைக் கிராமத்தில் 105 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றன. இதில், 55 குடும்பத்தில் மர்மமான முறையில் குறைந்தபட்சம் ஒருவராவது வாய் பேச முடியாமலோ, காது கேட்கும் திறன் இல்லாமலோ மாற்றுத் திறனாளியாக இருந்து வருகின்றனர். இதுபோல், 78 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 41 பேர் பெண்கள், 30 பேர் குழந்தைகள். கடந்த 20 ஆண்டாக பல்வேறு அரசு அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த கிராமத்துக்கு சென்று மக்களை அணுகிய போதிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.இந்நிலையில், இந்த விநோத கிராமத்தின் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட, இந்த கிராமத்தையே ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை தத்தெடுத்துள்ளது. முதற்கட்டமாக, இந்த மக்களுக்கான உடை, உணவு, சுகாதாரம் ஆகியவற்றைக் கவனிப்பது மட்டுமின்றி, தெலுங்கானாவில் சிறப்புப் பயிற்சி பெற்ற சைகை மொழி வல்லுனர்களை நியமித்து, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று கல்வி போதிக்கும் பணியை ராணுவம் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் ராணுவம் முதல் கட்டமாக 10 குழந்தைகளுக்கு, தலா ரூ.17,000 மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை வழங்கியது, அவர்களுக்கு சைகை மொழி கற்பிப்பதற்கான பயிற்சிகளையும் தொடங்கியது. …

The post வாய் பேசாத, காது கேளாமல் பிறக்கும் குழந்தைகள் காஷ்மீரில் விநோத கிராமம்: ராணுவம் தத்தெடுத்தது appeared first on Dinakaran.

Tags : Bizarre village ,Kashmir ,Paderva ,Bizarre ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!