×

கொளத்தூரில் சாலையை மறித்து பிரசாரம் செய்த பாஜ தலைவர் அண்ணாமலையை ஹாரன் அடித்து ஓடவிட்ட மக்கள்: கோஷ்டி மோதலால் வேட்பாளரை தாக்க பாய்ந்த பாஜவினரால் பரபரப்பு

சென்னை: கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வந்திருந்தார் கொளத்தூர், ரெட்ஹில்ஸ் சாலை மூகாம்பிகை பேருந்து நிலையம் அருகே இதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 7 வேட்பாளர்களும் மேடையில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, அண்ணாமலை மேடையில் ஏறி பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது காரில் வந்த அண்ணாமலை கூட்டம் குறைவாக இருந்ததால் மேடையில் ஏறாமல் வாகனத்திலேயே நின்று பிரசாரம் மேற்கொண்டார். 3 சாலைகளின் சந்திப்பு என்பதால் அவர் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி பிரசாரம் செய்தபோது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஹாரன் அடிக்க தொடங்கினர். அண்ணாமலை இரண்டு முறை திரும்பி பார்த்து கோபப்பட்டார். எனவே, வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் கூறி தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பேசிவிட்டு, வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் நாம் இடைஞ்சலாக இருக்கக் கூடாது எனக்கூறி பேச்சை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து சென்றார். பின்பு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பிய சில வினாடிகளிலேயே பாஜ சார்பில் 64வது வார்டில் போட்டியிடும் சரவணன் என்பவரை சூழ்ந்துகொண்ட பாஜ நிர்வாகிகள், `புளியந்தோப்பு பகுதியில் இருந்து நீங்கள் கொளத்தூர் தொகுதியில் ஏன் போட்டியிடுகிறீர்கள். இங்கு ஆட்களா இல்லை’ என கேட்டனர். அதற்கு வேட்பாளரின் ஆதரவாளர்கள் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முத்தையாவை அடிக்க பாய்ந்தனர். உடனே அங்கிருந்த மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் வேட்பாளரை அடிக்க பாய்ந்தனர். இரு தரப்பினரையும் மடக்கி விட்ட பாஜவினர் அவர்களை கலைந்து போகும்படி அறிவுறுத்தினர். காவல்துறையும் அங்கு வந்து இரு தரப்பினரையும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஏற்கனவே பாஜ தலைவர் அண்ணாமலை எந்த ஒரு விஷயத்தையும் பேசாமல் தாமரை சின்னத்தில் மட்டும் வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு சென்ற நிலையில் அதன்பிறகு பாஜவினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.கொளத்தூர் தொகுதியில் மழைக்காலத்தில் பொதுமக்களிடம் நலம் விசாரிக்க வந்த அண்ணாமலை தண்ணீர் இல்லாத இடத்தில் போட்டோ ஷூட் நடத்தியது இணையதளத்தில் வைரலானது. தற்போது, இரண்டாவது முறையாக கொளத்தூர் தொகுதிக்கு வந்த அண்ணாமலைக்கு அவமானமே மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.* பணக்கார வேட்பாளர்கள் பாஜவில் இல்லையாம்சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து,  பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மணலி, கொளத்தூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது அண்ணாமலை பேசியதாவது: மத்திய அரசின் தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் அதன் பணிகள் விரிவுபடுத்தப்பட்டதின் விளைவாகவே, மக்கள் அனைவரும் இன்றைக்கு நிம்மதியாக நடமாட முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பாஜவுக்கு அங்கீகாரம் வழங்குங்கள். இந்த முறை ஒரு நல்ல மாற்றத்துக்காக, எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு வாய்ப்பு தாருங்கள். எங்கள் வேட்பாளர்கள் யாரும் பெரும் பணக்காரர்கள் கிடையாது. எனவே ‘தாமரை’ சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த சென்னையின் தலையெழுத்தே மாறும். எத்தனை மழை வந்தாலும் சாலையில் தண்ணீர் தேக்கமில்லாத நிலைக்கு சென்னையை மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்….

The post கொளத்தூரில் சாலையை மறித்து பிரசாரம் செய்த பாஜ தலைவர் அண்ணாமலையை ஹாரன் அடித்து ஓடவிட்ட மக்கள்: கோஷ்டி மோதலால் வேட்பாளரை தாக்க பாய்ந்த பாஜவினரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Baja ,Annamalay ,Kolathur ,Goshti ,Chennai ,Tamil Nadu ,Annamalai ,Redhills Road Mookambikai ,Haran ,Bajaviner ,Koshti ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...