×

141வது வார்டில் ராஜா அன்பழகனுக்கு வாக்குசேகரிப்பு 33 அம்ச மக்கள் திட்டம் செயல்படுத்தப்படும்: தமிழச்சி தங்கபாண்டின் எம்பி உறுதி

சென்னை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 141வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஜெ.கருணாநிதி எம்எல்ஏ ஆகியோர்  நேற்று சி.ஐ.டி நகர், தென்மேற்கு போக் சாலை, தெற்கு தண்டபாணி தெரு, நியூ போக் சாலை மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மக்களோடு மாமன்ற உறுப்பினர் திட்டம், 24 மணிநேர மக்கள் குறை தீர்ப்பு மையம் உள்ளிட்ட 33 அம்ச வாக்குறுதியை எடுத்துக்கூறி மக்களின் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் இலவச பெண்கள் வேலை வாய்ப்பு மையம், இலவச கணினி பயிற்சி மையம், இலவச தியான யோகா பயிற்சி மையம், புதிய உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட 33 அம்ச மக்கள் நல திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தனர். இந்த பிரசாரத்தின்போது கோ.உதயசூரியன், ஆ.ஏழுமலை, வட்டக்கழக செயலாளர்கள் எஸ்.லட்சுமி காந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், எல்.வீரப்பன், எஸ்.ராமலிங்கம், எல்.குமரன், ரா.கர்ணா, வழக்கறிஞர் ஜெயவேல், லயன் சக்திவேல் மற்றும் முன்னோடிகள், நிர்வாகிகள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள், கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்….

The post 141வது வார்டில் ராஜா அன்பழகனுக்கு வாக்குசேகரிப்பு 33 அம்ச மக்கள் திட்டம் செயல்படுத்தப்படும்: தமிழச்சி தங்கபாண்டின் எம்பி உறுதி appeared first on Dinakaran.

Tags : Raja Anbazhagan ,Tamilachi Thangaband ,Chennai ,South Chennai ,DMK ,Raja Anbazhakan ,Secular Progressive Alliance ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்