×

தமிழர் தொன்மையை பறைசாற்றும் கீழடியில் விறு விறுப்படைந்துள்ள 8வது கட்ட அகழாய்வு பணிகள்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11ம் தேதி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து கீழடியில் வீரணன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளன. அகரம், கொந்தகை ஆகிய இரு இடங்களிலும் அரசு புறம்போக்கு நிலங்களில் அகழாய்வு பணிகள் நடைபெறவுள்ளன. அந்த இடங்களில் உள்ள கருவேலமரங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் தொல்லியல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 7 கட்டமாக நடந்த அகழாய்வின் போது பச்சை நிற பாசிகள், பாசி மணி, பானை ஓடுகள், தாயக்கட்டை, அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் உள்பட பல்லாயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்கள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு ஏராளமான பார்வையாளர்கள் தினமும் பார்வையிட்டனர். அங்கு தற்காலிக கூரைகள் அகற்றப்பட்டு நிரந்தர கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. …

The post தமிழர் தொன்மையை பறைசாற்றும் கீழடியில் விறு விறுப்படைந்துள்ள 8வது கட்ட அகழாய்வு பணிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,Keezhadi ,Tamil Nadu Archeology department ,
× RELATED உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற...