×

வாரணாசி குரு ரவிதாஸ் கோயிலில் உணவு பரிமாறிய ராகுல், பிரியங்கா

வாரணாசி: வாரணாசியில் உள்ள குரு ரவிதாஸ் கோயிலில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் நேற்று பக்தர்களுக்கு உணவு பரிமாறினர். இதனால் பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். 15ம் நூற்றாண்டை சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞரும் புனித துறவியுமானவர் குரு ரவிதாஸ். இவரது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா ஆகியோர் நேற்று வழிபாடு செய்தனர். பிறகு அங்குள்ள சமூக உணவு கூடத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறினர். இதைத் தொடர்ந்து பக்தர்களுடன் உரையாடினார்.இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ராகுல், “புனித துறவி குரு ரவிதாஸுக்கு பணிவான வணக்கம்” என்று கூறியுள்ளார். குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலை வரும் 20ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது. முன்னதாக இம்மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 15-16ம் நூற்றாண்டு பக்தி இயக்கத்தை சேர்ந்த குரு ரவிதாஸின் பாடல்கள் குரு கிரந்த சாகிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி நாளில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.கான்பூரில் பிரசாரம்:பிரியங்கா காந்தி நேற்று தனது உ.பி. பயணத்தில் கான்பூரில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். அப்போது, வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார்….

The post வாரணாசி குரு ரவிதாஸ் கோயிலில் உணவு பரிமாறிய ராகுல், பிரியங்கா appeared first on Dinakaran.

Tags : Rahul ,Priyanka ,Varanasi Guru Ravidas Temple ,Varanasi ,Congress ,Rahul Gandhi ,Priyanka Gandhi Vadera ,Guru Ravidas Temple ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!