×

கண் பாதிப்புள்ள மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுரை

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் காணொலி காட்சி வாயிலாக நேற்று பேசியதாவது: பள்ளிகளில் கடைசி வரிசையில் இருக்கும் மாணவர்களுக்கு கவன சிதறல், கல்வியில் பின்தங்கிய நிலை ஏற்பட பார்வை குறைபாடு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, பார்வையை சரியாக பராமரிக்க, கண்ணொளி காக்கும் திட்டத்தில் ஆண்டுதோறும் 16 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 25 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதிக்கப்படுகிறது. இதில் கண் பார்வை பாதிப்புள்ள 1.2 லட்சம் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கண்ணாடிகளை தொடர்ந்து அணிந்தால் தான் பார்வை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு கண் பிரச்சனை உள்ள மாணவர்கள் மொபைல் போன்களை தவிர்க்க வேண்டும். மேலும், சரிவிகித உணவு, உடற்பயிற்சி, சரியான ஓய்வு எடுத்தால், பார்வை திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்….

The post கண் பாதிப்புள்ள மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Public Health ,Chennai ,Selvavinayagam ,
× RELATED டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு...