×

வெப்சீரிஸில் நடிக்கிறார் நயன்தாரா: லோகேஷ் கனகராஜ் உதவியாளரின்

சென்னை: லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் இயக்க உள்ள வெப்சீரிஸில் நயன்தாரா நடிக்கிறார். நயன்தாரா, ஜெயம் ரவியுடன் ‘இறைவன்’, அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ‘ஜவான்’, நயன்தாராவின் 75வது படம் மற்றும் ‘தி டெஸ்ட்’ உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா ஒரு வெப் தொடரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப்தொடரை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் விஷ்ணு எடாவன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற, சமீபத்தில் வெளியான ’நா ரெடி’ என்ற பாடலையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் நயன்தாரா முதன்முதலாக வெப் தொடரில் நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெப்சீரிஸில் நடிக்கிறார் நயன்தாரா: லோகேஷ் கனகராஜ் உதவியாளரின் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Lokesh Kanagaraj ,CHENNAI ,Jayam Ravi ,Shahrukh Khan ,Atlee ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணமா? அர்ஜூன் தாஸ்