×

166, 167, 164வது வார்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்பி வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பிருந்தாஸ்ரீ முரளி கிருஷ்ணன் (160வது வார்டு), ரேணுகா சீனிவாசன் (161வது வார்டு), சாலமோன் (162வது வார்டு), பூங்கொடி ஜெகதீஸ்வரன் (163வது வார்டு), தேவி ஏசுதாஸ் (164வது வார்டு), காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் (165வது வார்டு), என்.சந்திரன் (166வது வார்டு), துர்கா தேவி நடராஜன் (167வது வார்டு) ஆகியோரை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி எம்பி ஆகியோர் ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூரில் வாக்கு சேகரித்தனர்.நங்கநல்லூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், திமுக வேட்பாளர்கள் என்.சந்திரன், தேவி ஏசுதாஸ், துர்காதேவி நடராஜன் ஆகியோரை ஆதரித்து டி.ஆர் பாலு எம்பி பிரசாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே.இப்ராகிம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராமன் மார்த்தாண்டன், மூவரசம்பட்டு ஊராட்சி தலைவர் ஜி.கே.ரவி, வட்ட செயலாளர்கள் ஜெ.நடராஜன், எல்.காசி, ஸ்ரீகாந்த், அபிஷேக், இ.உலகநாதன், வெள்ளைச்சாமி, செல்வம், மாரிமுத்து, வேல்முருகன், கேபிள் ராஜா, விக்னேஷ், பாண்டிச்செல்வி, விஜயலட்சுமி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அய்யம்பெருமாள், கனிபாண்டியன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….

The post 166, 167, 164வது வார்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்பி வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ward ,DMK ,DR ,Balu MP ,Alandur ,Chennai Corporation ,Brindasree Murali Krishnan ,160th Ward ,Renuka Srinivasan ,
× RELATED தி.நகரில் உள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலு...