×

மாணவி தற்கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவை பாஜவுக்கு கிடைத்த வெற்றியாக அண்ணாமலை கருதுவது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக பாஜவுக்கு கிடைத்த வெற்றியாக அண்ணாமலை கருதுவது ஏன் என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவ்வழக்கை பொறுத்தவரை, தற்கொலை நிகழ்ந்தவுடனே தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. சரியான திசையில் விசாரணையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை முழுமையாக அறியாமல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஆணையிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. இந்த உத்தரவு தமிழக பாஜவுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதி அண்ணாமலை மகிழ்ச்சிக் கடலில் நீந்த முற்பட்டிருக்கிறார். தமிழக அரசை பொறுத்தவரை, மடியில் கனம் இல்லாததால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறது. வழக்கில் உண்மை வெளியே வர வேண்டும். இதில் பாஜ மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆணை வழங்கிய பிறகும் முதல்வரிடம் நீதி கேட்டு போராடுவது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்….

The post மாணவி தற்கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவை பாஜவுக்கு கிடைத்த வெற்றியாக அண்ணாமலை கருதுவது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Baja ,K.K. S. Anakiri ,Chennai ,Annamala ,Supreme Court ,Tamil Nadu Baja ,Tamil Nadu ,K.K. S. Analakiri ,Dinakaran ,
× RELATED பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை...