×

விளம்பர படத்தில் நடிக்க ராஜமவுலிக்கு ரூ.30 கோடி சம்பளம்

ஐதராபாத்: விளம்பர படத்தில் நடிக்க ரூ.30 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் ராஜமவுலி. ‘பாகுபலி’ படம் மூலமாக உலக அளவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவரின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு சென்றது. படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கரும் கிடைத்தது. படம் ரூ.1200 கோடி வசூலை ஈட்டியது. இந்த படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபுவுடன் ராஜமவுலி இணைகிறார். இந்த படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ராஜமவுலி பிரபல மொபைல் போன் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நிறுவனத்தின் மொபைல் விளம்பரம் ஒன்றிலும் நடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார் ராஜமவுலி. ஒரு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் பெறும் அவர், மகேஷ்பாபு படத்துக்கு சம்பளத்துடன் லாபத்தில் பங்கும் பெற உள்ளாராம்.

The post விளம்பர படத்தில் நடிக்க ராஜமவுலிக்கு ரூ.30 கோடி சம்பளம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajamouli ,Hyderabad ,Oscars ,Keeravani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐதராபாத்தில் புற்றுநோய்க்கு என போலி...