×

கோவை அருகே டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: புதுமாப்பிள்ளையுடன் தாயாரும் இறந்த சோகம்

கோவை: கோவை ஈச்சனாரி அருகே டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காதலர் தினத்தில் திருமணம் முடிந்த புதுமாப்பிள்ளை, தனது தாயாருடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்த சியாம் என்பவருக்கு காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கோவை ஈச்சனாரி மேம்பாலத்தில் சியாம் தனது குடும்பத்தினருடன் பொள்ளாச்சி நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், அதனடியில் கார் முழுமையாக சிக்கிக் கொண்டது. இதில் காரை ஓட்டிச் சென்ற சியாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாயார் மஞ்சுளா உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஈச்சனாரி தனியார் மருத்துவமையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளாவும் மரணமடைந்தார். இந்த விபத்தால் கோவை-பொள்ளாட்சி சாலையில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.      …

The post கோவை அருகே டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: புதுமாப்பிள்ளையுடன் தாயாரும் இறந்த சோகம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Echanari ,Valentine's Day ,Dinakaran ,
× RELATED மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி...