×

அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்-மாணவர்கள் அச்சம்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஆதிதிராவிடர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கரும்பலகை திட்டத்தின் கீழ் சிமெண்ட் சீட்டிலான கட்டிடம் கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கட்டிடம், சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, சீமை ஓடுகள் அமைத்து புனரமைக்கப்பட்டது.அதன்பின், இப்பள்ளிக்கு கூடுதல் கட்டி டம் கட்டப்பட்டது. இதையடுத்து கூடுதல் பள்ளிக் கட்டடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம், தற்போது செயல்பாடின்றி மீண்டும் பழுதாகி, ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, கட்டிடத்தின் மேலே இருக்கும் ஓடுகள் திடீர் திடீரென சரிந்து கீழே விழுகிறது.கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த பள்ளிக்  கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்-மாணவர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Rishivantiyam ,Panchayat Union Primary School ,Adi Dravidar ,Dinakaran ,
× RELATED அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை